மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
நள்ளிரவில் கழிவறைமுன் கேட்ட அலறல் சத்தம்! பதறியடித்து ஓடிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சென்னை கண்ணகி நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன். அவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆதிலட்சுமி மற்றும் சுந்தர்ராஜன் இருவரும் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பாம்பு வந்ததாகவும், அதனை தேடியும் உள்ளனர். அப்பொழுது சுந்தர்ராஜனும் பாம்பை அடிக்க தேடியுள்ளார். இந்நிலையில் ஆதிலட்சுமி கழிவறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார்.
அப்போது கழிவறை வெளியே இருந்த நல்ல பாம்பு, ஆதிலட்சுமி காலில்கடித்து காலைச் சுற்றிக் கொண்டது. இந்நிலையில் அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் அனைவரும் பதறியடித்து ஓடி வந்துள்ளனர். அதற்குள் பாம்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அப்பகுதி இன்ஸ்பெக்டர் வீரக்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு விரைந்த அவர் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சுந்தரராஜன் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.