கொரோனா பாதிப்பில் கிருஷ்ணகிரி வராதது ஏன்? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

கொரோனா பாதிப்பில் கிருஷ்ணகிரி வராதது ஏன்? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!



why-no-corono-cases-at-krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பே இல்லை என தகவல் அளித்ததற்கான விளக்கத்தினை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இத்தனை நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இந்த ஒரு மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

Krishnagiri

ஆனால் இன்று கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதாக காலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பினை வெளியிட்டார். இதனால் தப்பிய ஒரு மாவட்டமும் பறிபோனதே என பலரும் வேதனையடைந்தனர்.

ஆனால் இன்று மாலை சுகாதாத்துறை வெளியிட்ட கொரோனா பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் இடம்பெறவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "புட்டபர்த்தியில் இருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேலம் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.