ஏன்டா கஞ்சா பொட்டலத்தை தட்டிவிட்ட.. குழந்தைகளுக்கு சூடு போட்ட அரக்கன்.. கொடூர தந்தையின் வெறிச்செயல்..!



why-did-you-knock-the-ganja-package-the-demon-who-warme

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் டில்லி கணேஷ் - யமுனா தம்பதியினர். டில்லி கணேஷ் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4  வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று தில்லி கணேஷின் மகன்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவரது கையில் வைத்திருந்து கஞ்சா பொட்டுலத்தை தட்டி விட்டு உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டில்லி கணேஷ் குழந்தைகளை கடுமையாக திட்டியதோடு மட்டுமல்லாமல் கரண்டியை தீயில் சுட வைத்து இரக்கமின்றி குழந்தைகளின் உடல்களில் பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.

Crual father

இதனையடுத்து வெளியே சென்று வீடு திரும்பிய டில்லி கணேஷின் மனைவி யமுனா குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தைகள் தீக்காயங்களுடன் துடிப்பதைக் கண்டு பதறிப்போன யமுனா குழந்தைகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சூடு வைத்துவிட்டு தப்பி ஓடிய கொடூர தந்தை டெல்லி கணேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.