அரசியல் தமிழகம் சினிமா

தமிழகத்தின் மிகசிறந்த ஹீரோ யார்? தமிழிசை கூறிய அசத்தலான பதில்! யாரை சொன்னார் தெரியுமா?

Summary:

Who is super hero of tamilnadu tamilisai answer

தமிழகத்தில் தாமரையை மலரச்செய்தே தீருவேன் என்று கூறும் தமிழக பாஜக புள்ளிகளில் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன். தன்னை நோக்கி எத்தனையோ விமர்சனங்கள், மீமிஷ், புகார்கள் வந்தாலும் எதையும் சட்டை பண்ணாது தில்லாக பேசக்கூடியவர் திருமதி. தமிழிசை.

இந்நிலையில் வருடம் வருடம் ஆந்த விகடன் வழக்கும் நம்பிக்கை விருதுகள் விழா இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்றது. சமூகம், சினிமா, அரசியல், இலக்கியம், எழுத்து, கதை, கவிதை என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு  விருது வழங்குவதே இந்த ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்.

அதன்படி, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 இந்த வருடம் சிறப்பாக நடைபெற்று அதன் காட்சிகள் சன் தொலைகாட்சியில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிவருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களின் ஒருவராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொண்டார்.

விழா மேடைக்கு வந்த தமிழிசையிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்விதான் தமிழகத்தின் சிறந்த ஹீரோ யார் என்பது. தமிழிசை என்ன பதில் கூறப்போகிறார் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் அசத்தலான பதிலை கூறி அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார் தமிழிசை.

தமிழகத்தில் தனது வாக்கினை போட்டு, சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் மிக சிறந்த ஹீரோ என பதில் கூறினார் தமிழிசை சவுந்தர்ராஜன்.


Advertisement