யார் மாஸ்.? பரிதாபமாக பலியான 21 வயது இளைஞர்... கொலையில் முடிந்த கோஷ்டி மோதல்.!

யார் மாஸ்.? பரிதாபமாக பலியான 21 வயது இளைஞர்... கொலையில் முடிந்த கோஷ்டி மோதல்.!


who-is-mass-a-21-year-old-youth-who-was-tragically-kill

நண்பர்களுக்குள் யார் பெரியவன் என்று கெத்து காட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சில இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த குமாரகுறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ் (21)மற்றும் அபி பாலன் (21). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில இளைஞர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்த போதும் நட்புடன் பழகி வந்திருக்கின்றனர்.

tamilnaduஇந்நிலையில் பரமக்குடி ஆற்று பாலம் அருகே இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி இருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் யார் கெத்து.? என்பது தொடர்பாக விவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவாதம் முற்றி வாக்குவாதமாக மாறிய நிலையில் ஹரிஷ் மற்றும் அபி பாலனின் எதிர் தரப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து ஆற்றுப் பாலத்தில் ஹரிஷ் மற்றும் அபி பாலன் தனியாக நின்று கொண்டிருந்தபோது கத்தி மற்றும் பீர் பாட்டில்களுடன் வந்த கும்பல் ஹரிஷ் மற்றும் அபி பாலன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஹரிஷ் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த அபி பாலனை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அபி பாலன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.