தமிழகம்

சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.! கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழை நீர்!

Summary:

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் தண்ணீர் புகுந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் நேற்று காலையில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முதல்வரும் திமுக தலைவராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவருமான கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ளது.

சென்னையில் நேற்று காலையில் இருந்து பெய்துவரும் மழையின் காரணமாக அவரது இல்லத்தை மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது மழைநீர் சிறிய அளவில் வீட்டினுள் புகுந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் வாசலில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.


Advertisement