வீட்டில் தனியாக இருந்த மனைவி.! நள்ளிரவில் கதவை தட்டிய நபர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!
வீட்டில் தனியாக இருந்த மனைவி.! நள்ளிரவில் கதவை தட்டிய நபர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோடங்கிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் செல்வராஜ் தனது மனைவி சித்ராவுடன் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வழக்கம். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வழக்கமாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை தட்டும்போது மனைவியின் பெயரை சொல்லி அழைப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கதவு தட்டப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள வீட்டிற்கு போன் செய்து இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து சித்ராவுக்கு உதவி செய்ய வந்துள்ளனர். அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், அவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் சித்தவும் வெளியே வந்து தப்பி ஓடியவர்களை துரதியுள்ளனர். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.