பிரியாணி பிரியரா நீங்கள்? பிரியாணி சாப்பிட சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உஷார்!

பிரியாணி பிரியரா நீங்கள்? பிரியாணி சாப்பிட சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உஷார்!


warms-in-chiken-biriyani-chenani-thirunintravur-hotel

ஆசையாக பிரியாணி சாப்பிட சென்ற நபர் பாதி சாப்பிட்டுவிட நிலையில் பிரியாணியில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திருநின்றவூரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார்.

சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த அவருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. பிரியாணியை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணவில் புழுக்கள் நெளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இதுகுறித்து உணவக நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.

Crime

உணவில் புழு இருந்ததுக்கு சரியான விளக்கம் தராமல் வேறு உணவு தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அந்த உணவை புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளர்.

இதுகுறித்து உணவகம் சார்பாக தரப்பட்டுள்ள விளக்கத்தில், சிக்கெனில் புழு இருந்ததற்கு அந்த சிக்கனை விற்ற கடைக்காரரே காரணம் என்றும். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துளன்னர்.