தமிழகம்

ஆலங்குடி அருகே ஊராட்சியில் தொடர்ந்து முறைகேடுகள்.! சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கிய வார்டு உறுப்பினர்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பள்ளத

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பள்ளத்திவிடுதி ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் பள்ளத்திவிடுதி ஊராட்சியில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தொடர்பாக பலமுறை மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளத்திவிடுதி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் முருகேசன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த முருகேசன், நேற்று காலை பள்ளத்திவிடுதி ஊராட்சி மன்றம் முன்பு அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இது குறித்து திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதனையடுத்து வருகிற 28-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எழுதி கொடுத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர். இதனையடுத்து முருகேசன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு சென்றார்.


Advertisement