தலைக்கேறிய போதை.. டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய 22 வயது இளைஞர் பரிதாப மரணம்..! 

தலைக்கேறிய போதை.. டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய 22 வயது இளைஞர் பரிதாப மரணம்..! 


virudhunagar-watrap-man-died-electrical-attack-he-drunk

மிதமிஞ்சிய மதுபோதையில் பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய 22 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அத்திக்கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 20 க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் இருக்கின்றன. 

இந்த பகுதியை சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் ஈஸ்வரன் (வயது 22). இவரின் பெற்றோர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறார். மேலும், உறவினர்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு, வாழ்நாட்களை நகர்த்தி வந்துள்ளார்.

ஈஸ்வரனுக்கு மதுபானம் அருந்தும் பழக்கமும் இருந்து வந்த நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த ஈஸ்வரன் டிரான்ஸ்பரம் மீது ஏறியுள்ளார். இதனைக்கண்டு பதறிப்போன மக்கள் அவரை கீழே இறங்கி வர அறிவுறுத்தியுள்ளனர். 

Virudhunagar

அதனை கண்டுகொள்ளாத ஈஸ்வரன் தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறவே, அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக கூமாபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.