துணிதுவைக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!Virudhunagar Srivilliputhur Girl Died 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், என். சண்முகசுந்தராபுரம் பகுதியில் வசித்து வருபவர் கருத்தப்பாண்டி. இவரின் மனைவி பானுமதி. தம்பதிகளின் மகள் ஏஞ்சலி (வயது 16). இவர் திருவல்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு பயின்று வருகிறார். 

12ம் வகுப்பு செல்ல அவர் காத்திருந்த நிலையில், தனது கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் குழையில் துணி துவைக்க சம்பவத்தன்று சென்றுள்ளார். அச்சமயம் சிறுமியின் தலைக்கு மேலே சென்ற மின்சார கம்பி அறுந்து சிறுமியின் மீது விழுந்துள்ளது. 

இதையும் படிங்க: தோட்டத்தில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!

சிறுமிக்கு மின்சாரத்தில் காத்திருந்த எமன்

இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கிய சிறுமி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் மற்றும் குடும்பத்தினர், சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள் குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காததே மரணத்திற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தோட்டத்தில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!