#Fire Accident: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; சிவகாசி அருகே மீண்டும் சோகம்.. 2 பேர் பரிதாப பலி.!

இன்று விளாம்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்து 2 பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி விளாம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையானது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்படவே, இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.