தொட்டில் கழுத்தில் இறுக்கியதால் சோகம்; உடன்பிறப்புகளுடன் விளையாடிய சிறுவன் மரணம்.. சிவகாசியில் சோகம்.!Virudhunagar Sivakasi Child Died 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சிவகாமிபுரம் காலனியில் வசித்து வருபவர் செல்வா குமார பாண்டியன். இவர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். திருமணமான இவருக்கு காமேஷ் அருண் குமார் (12), கமலேஷ் அருண் குமார் (12) என இரட்டை குழந்தைகளும், சக்தி காவியா (8) என்ற மகளும் என 3 குழந்தைகள் இருக்கின்றன. 

கண்ணாமூச்சி விளையாட்டு:

இரட்டை சகோதரர்கள் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று செல்வகுமார் மற்றும் அவரின் மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடி இருக்கின்றனர். 

எமனாகிப்போன தொட்டில்:

அச்சமயம் தொட்டிலுக்கு போடப்பட்ட துணி கமலேஷின் கழுத்தில் சிக்கி சுருக்கி இறுகியது. இதனால் மயங்கிய சிறுவனை பார்த்து குழந்தைகள் அலற, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மரணம் உறுதி:

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவனின் இறப்பை உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக சிவகாசி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.