போதை ரௌடியை கத்தியால் குத்திக்கொன்ற மூவர் கும்பல்; வம்பிழுத்தவனை கொன்று வீசிய பகீர் சம்பவம்.!

போதை ரௌடியை கத்தியால் குத்திக்கொன்ற மூவர் கும்பல்; வம்பிழுத்தவனை கொன்று வீசிய பகீர் சம்பவம்.!


Virudhunagar Rajapalayam Rowdy Killed by Gang 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், முகவூர் கிராமம் காமராஜர் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் குருசாமி. மனைவி முனீஸ்வரி. தம்பதிகளுக்கு பாண்டி காளி என்ற மகன் இருக்கிறார். இவர்கள் குடும்பத்தோடு இராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் தற்போது வசித்து வருகிறார்கள். 

குடும்பத்துடன் மலையடிப்பட்டி பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி இருக்கிறார்கள். இந்நிலையில், பாண்டி காளி மற்றும் அவரின் தாய்மாமா காளீஸ்வரன் ஆகியோர் எப்போதும் மதுபோதையில் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

அதுமட்டுமல்லாது, உள்ளூரில் ரௌடிபோல வலம்வந்த இருவரும், மக்களிடம் போதையில் பிரச்சனை செய்து வழக்குகளை வாங்கிக்கொண்டு சுற்றிவந்துள்ளானார். அவ்வப்போது சிறைக்கு சென்று ஜாமினில் வெளியாகி இருக்கின்றனர். 

Virudhunagar

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, மீண்டும் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வந்துள்ளனர். அங்கு அப்பகுதியை சேர்ந்த செல்வம், ஈஸ்வரன், சுந்தரராஜ் ஆகியோரிடம் பிரச்சனை செய்துள்ளனர். 

இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த தகராறில் ஆத்திரமடைந்த மூவரும் பாண்டிகாளியை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த பாண்டி காளி பொதுமக்களால் மீட்கப்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இராஜபாளையம் தெற்கு காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.