இராஜபாளையம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்து.. நூலிழையில் உயிர்தப்பிய முதியவர்.. பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்..!

இராஜபாளையம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்து.. நூலிழையில் உயிர்தப்பிய முதியவர்.. பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்..!


virudhunagar-rajapalayam-lorry-accident-6-am-cctv-outed

இராஜபாளையம் நகரின் பிரதான சாலையில் இன்று அதிகாலை லாரி ஏற்படுத்திய விபத்தில், முதியவர் உயிர் தப்பிய பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் சாந்தி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே தீபம் பர்னிச்சர் கடை மற்றும் அஜந்தா ஸ்வீட்ஸ் என்ற இனிப்பக கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில், அதிகாலை 05:55 மணியளவில் மதுரை நோக்கி பயணம் செய்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த லாரி இனிப்பகத்தின் முகப்பு பகுதியை இடித்தவாறு, மற்றொரு கடையை உடைத்து மோதி நின்றது. மேலும், அருகே இருந்த மற்றொரு கடையில் இருந்து வெளியே வந்தவர், கனப்பொழுதில் விபத்தில் இருந்து தப்பித்தார். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Virudhunagar

இராஜை நகரில் பகல் வேளைகளில் எந்த நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் பகுதிகளில் இப்பகுதியும் ஒன்றாகும். இதே விபத்து பகல் வேளைகளில் நடந்திருந்தால் குறைந்தது 5 பேர் முதல் 10 பேர் வரை உயிரிழந்திருப்பார்கள். பல வாகனங்கள் சேதம் அடைந்திருக்கும். 

நல்ல வேலையாக பெரும் அசம்பாவித விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், லாரியின் ஓட்டுநர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Update: விபத்தில், மரக்கடையில் இருந்த மாரி முத்து என்ற தொழிலாளி உயிரிழந்ததாகவும், லாரி ஓட்டுநர் காமராஜ் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.