அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டில் உடைந்து, பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை உயிருக்கு ஊசல்.. விருதுநகரில் துயரம்.!

அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டில் உடைந்து, பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை உயிருக்கு ஊசல்.. விருதுநகரில் துயரம்.!


Virudhunagar Govt Hospital Bed Damaged New born 5 Days Baby Head Injured

தாயும் - சேயும் படுத்திருந்த கட்டில் உடைந்ததால், பிறந்து 5 நாட்கள் ஆகிய பச்சிளம் குழந்தையின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரங்கிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரின் மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 1 குழந்தை உள்ள நிலையில், கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்காக புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை முத்துலெட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் - சேய் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குழந்தை வைக்கப்பட்டு இருந்த கட்டில் திடீரென உடைந்து விழுந்துள்ளது. 

Virudhunagar

இந்த விபத்தில், குழந்தையின் தலையில் காயம் ஏற்படவே, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அறிந்த உறவினர்கள், சேதமடைந்த உபகரணத்தை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

விபத்து தொடர்பாக மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவிக்கையில், "கட்டில் உடைந்ததால் பிறந்து 5 நாட்கள் ஆகிய குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று, குழந்தையும் - தாயும் படுத்திருந்த கட்டிலில் உறவினர்கள் 4 பேர் அமர்ந்ததால் இரும்புக்கட்டில் உடைந்தது" என்று கூறினார்.