கல்லூரி பேருந்து விபத்திற்குள்ளாகி சோகம்.. 20 மாணவிகள் படுகாயம்.. அச்சு உடைந்து விபரீதம்.!

கல்லூரி பேருந்து விபத்திற்குள்ளாகி சோகம்.. 20 மாணவிகள் படுகாயம்.. அச்சு உடைந்து விபரீதம்.!


virudhunagar-college-bus-accident-issue

கல்லூரி பேருந்தின் முன்பக்க சக்கர அச்சு உடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர் நோக்கி ஸ்ரீ.எஸ்.ஆர்.நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து 60 மாணவிகளுடன் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது ஒ.மேட்டுப்பட்டி என்ற ஒரு இடத்தில் திடீரென பேருந்து சக்கரத்தின் முன் அச்சு உடைந்த நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடியுள்ளது.

மேலும், சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதிய நிலையில், பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக நொறுங்கியது.

Virudhunagar

இதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பலத்த காயமடைந்ததையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயமடைந்த 6 மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.