தேங்காய்க்குள் தோன்றிய விநாயகர் சிலை! பிரமிப்புடன் பார்த்து வழிபட்டு செல்லும் பக்தர்கள்!!

தேங்காய்க்குள் தோன்றிய விநாயகர் சிலை! பிரமிப்புடன் பார்த்து வழிபட்டு செல்லும் பக்தர்கள்!!


vinayakar-silai-in-salem

முழுமுதற் கடவுளாகவும், வினைதீர்க்கும் விநாயகனாகவும் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திதியில் பிறந்தவர். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் சோபகிருது வருடமான இந்த வருடம் புரட்டாசி மாதம் 1 ஆம் தேதியான இன்று வளர்பிறை சதுர்த்தி திதி என்பதால், இன்று(18.09.2023) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கப்படி இன்று காலை 11.38 பின்பு சதுர்த்தி திதி தொடங்கி நாளை (19.09.2023) 11.50 மணி வரை உள்ளது. 

இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பல்வேறு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில்  தேங்காய்க்குள் விநாயகர் இருப்பது போன்ற சிலை செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் பிரமிப்புடன் பார்த்து வழிபட்டு செல்கிறார்கள்.