ஓடிவாங்க.. ஓடிவாங்க.. 10 ரூபாய்க்கு சுட சுட பிரியாணி.. ஆசையோடு போன மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ஓடிவாங்க.. ஓடிவாங்க.. 10 ரூபாய்க்கு சுட சுட பிரியாணி.. ஆசையோடு போன மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..



vilupuram-10-rupee-biriyani-issue

10 ரூபாய்க்கு பிரியாணி வாங்க ஆசைப்பட்டு கூட்டமாக கூடிய மக்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டிய சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

அரவிந்த் என்பவர் விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே புதிதாக பிரியாணி கடை ஒன்றை திறந்துள்ளார். தனது கடையை பிரபலப்படுத்தவேண்டும் என எண்ணிய அரவிந்த் அதற்காக புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, 10 பைசா நாணயத்தை கொண்டுவந்து கொடுத்தால் அந்த 10ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கப்படும் என அரவிந்த் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள், 10 ரூபாய் நாணயத்துடன் அரவிந்தின் புது பிரியாணி கடை முன் குவிய தொடங்கிவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு கூடியிருந்த மக்களை லத்தியால் அடித்து விரட்டி, கூட்டத்தை கலைத்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி, கூட்டம் கூட்டி, நோய் பரவலுக்கு வழிவகுத்ததற்காக கடையின் உரிமையாளர் அரவிந்தை போலீசார் கைது செய்ததோடு கடையில் இருந்த பிரியாணி அண்டாவையும் கைப்பற்றியுள்ளனர்.

பிரபலத்திற்காக ஆசைப்பட்டு கடை திறந்த முதல் நாளே கடையை மூடும் அளவிற்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் வைரலாகிவருகிறது.