ஓடும் அரசு பேருந்தில் இளம் காதல் ஜோடி செய்த பரபரப்பு காரியம், அலறிப்போன பயணிகள்.. கதறிய பெற்றோர்.!

ஓடும் அரசு பேருந்தில் இளம் காதல் ஜோடி செய்த பரபரப்பு காரியம், அலறிப்போன பயணிகள்.. கதறிய பெற்றோர்.!


Viluppuram Native Love Couple Suicide Attempt Drinks Poison Bangalore to Salem TN Govt Bus

விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த உறவினரின் மகளான லோகேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், உறவினர்களாக இருந்த போதிலும் பெற்றோர்கள் இடையேயான சண்டை அவர்களை திருமணம் செய்யவிடவில்லை. 

இதனால் இருதரப்பு பெற்றோர்களும் ராஜேஷ் - லோகேஸ்வரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, விழுப்புரத்தில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்றுள்ளது. 

Salem

பின்னர், அங்கிருந்து அரசு பேருந்தில் சேலம் வந்துகொண்டு இருந்த நிலையில், பேருந்து பயணத்தின் போதே இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், சேலம் கருப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர், காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு விரைந்த அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.