அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பலாத்கார வழக்கில் காவலர்களின் பிடியில் இருந்து தப்பிச்சென்ற கைதி தூக்கிட்டு சாவு : பரபரப்பு சம்பவம்.!
மேல்மலையனூர் அருகே 18 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் 3 பேர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் பயத்தில் காவலர்களின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர், கீழ்செவேலாம்பாடி கிராமத்தில் வசித்து வரும் 18 வயது சிறுமியை 3 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர், நேற்று குற்றவாளிகள் மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுகொண்டு இருந்தபோது, கைதான சம்பத், இராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோரில் வெங்கடேசன் தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தியபோது, அங்கிருந்து ஓட்டம் பிடித்த வெங்கடேசன் அருகேயிருந்த வைக்கோல் போரின் மீது ஏறி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் வெங்கடேசனின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவே, ஆத்திரமடைந்தவர்கள் வெங்கடேசனின் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை தொடர்கிறது.