தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாப மரணம்; மக்களே வெயிலில் அஜாக்கிரதை வேண்டாம்.!
தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாப மரணம்; மக்களே வெயிலில் அஜாக்கிரதை வேண்டாம்.!

வெயிலில் நடந்து சென்றவர் பரிதாபமாக பலியாகினார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 43). இவர் நேற்று பகல் வேளையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராமமூர்த்தியை பரிசோதனை செய்துவிட்டு, அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.