சத்துணவு பொறுப்பாளர் வேலைக்கு பணம் வாங்கி மோசடி.. வீடுபுகுந்து சொந்த கட்சிக்காரரை கொலைவெறியோடு தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்.!

சத்துணவு பொறுப்பாளர் வேலைக்கு பணம் வாங்கி மோசடி.. வீடுபுகுந்து சொந்த கட்சிக்காரரை கொலைவெறியோடு தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்.!


VIluppuram AIADMK Man Attacked Party Member Money Forgery Issue

அதிமுக ஆட்சியில் சத்துணவு பொறுப்பாளர் பணியை வாங்கித்தருகிறேன் என பணம் வாங்கி மோசடி செய்த ஒன்றிய செயலாளரிடம் கொடுத்த பணத்தை கேட்ட கிளை செயலாளரின் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லரசன்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் பேட்டை முருகன் (வயது 45). இவர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இதே ஊரை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் உதயசூரியன் (வயது 56). இவற்றின் மகன் சதீஷ் (வயது 35)., அதிமுக மேலவை பிரதிநிதி ஆவார். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது சத்துணவு பொறுப்பாளர் வேலைக்கு பணம் பெற்று ஒன்றிய செயலாளர் முருகனிடம் கொடுத்துள்ளனர். 

பணத்தை பெற்றுக்கொண்ட முருகன் வேலை வாங்கி தராத காரணத்தால், பணத்தை மீண்டும் கேட்டு கிளை செயலாளர் உதயசூரியனிடம் பணம் கொடுத்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பேட்டை முருகனின் காரை இடைமறித்த உதயசூரியன், பணத்தை கேட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது ஆதரவாளர்களுடன் உதயசூரியனின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த தாக்குதலில் உதயசூரியன், அவரின் மகன் சதீஷ், மருமகன் அய்யனார், சரத் குமார் மற்றும் ஆகாஷ் ஆகிய 5 பேரும் காயமடைந்துள்ளனர். கொலை வெறி தாக்குதலால் படுகாயமடைந்த உதயசூரியனை அழைத்து செல்ல வந்த அவசர ஊர்தி வாகனத்தையும் கிராமத்திற்குள் நிலைய விடாமல் தடுத்துள்ளனர். அவரின் சொந்த வாகனத்தையும் கிராமத்தில் இருந்து வெளியே விடவில்லை.  

தமிழ்நாடு

இதற்கிடையில், உதயசூரியனின் மகன் சதீஷ் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, அவரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வளவனூர் காவல் துறையினர், உதயசூரியன் உட்பட 2 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேட்டை முருகன் மற்றும் ஆதரவாளர்கள் வினோத் (வயது 32), கலையரசன் (வயது 30), ராஜ் (வயது 50), பிரபாகரன் (வயது 48), சீனு (வயது 43) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.