மது அருந்த பணம் தராத தாயை அம்மிக்குழவியால் அடித்தே கொன்ற மகன்.. குடிகாரனால் தாய்க்கு நடந்த பெரும் கொடூரம்..!!

மது அருந்த பணம் தராத தாயை அம்மிக்குழவியால் அடித்தே கொன்ற மகன்.. குடிகாரனால் தாய்க்கு நடந்த பெரும் கொடூரம்..!!


vikravandi-son-killed-his-mother

குடிப்பதற்கு பணம் தராத தாயை மகன் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி எஸ்.எஸ்.ஆர் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாஞ்சாலி. இவரின் மகன் விஜயகுமார். கூலி வேலைகளுக்கு தொழிலாளியாக செல்லும் விஜயகுமார், அதிகளவு மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளார். 

இதனால் தினமும் வேலைக்குச் சென்றாலும், அவர் மதுபானம் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் மதுபானம் அருந்துவதற்கு பணமில்லை என்றால் தனது தாயார் பாஞ்சாலியிடம் வாக்குவாதம் செய்து பணத்தை பிடுங்கி சென்று மதுபானம் அருந்துவது இவரின் வாடிக்கையான நிகழ்வில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. 

vizhupuram district

இந்த நிலையில் நேற்று பாஞ்சாலியிடம் மதுபானம் அருந்த பணம் கேட்டு இவர் சண்டையிட்ட நிலையில், பாஞ்சாலி தனனிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது தாயாரை சரமாரியாக தாக்கி அருகிலிருந்த அம்மிக்குழவியை எடுத்து தாயின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். 

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவர் இறந்து கிடத்திருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கவே, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.