தமிழகம் சினிமா

தமிழக அரசு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கோரிக்கையை ஏற்குமா?

Summary:

vijaysethupathi request tamilnadugovt

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி  நட்சத்திரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் தனக்கென ரசிகர்கூட்டங்ககளை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் சமீபகாலமாக பல பொது விழாக்களில் கலந்து கொண்டு மக்களுக்கு பலனுள்ள பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார்.

சென்னையில் விழிப்புணர்வுக்கான "வரைபடங்களின் வழித்தடங்கள்" என்ற தலைப்பில்  நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய விஜய்  சேதுபதி, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு இன்னும் குழந்தையாக தான் உள்ளார். ஆதலால் அந்த குழந்தையை தாயிடம் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ராஜூவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும்  அதுதொடர்பாக மாநில ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement