இளைஞர்களை குறிவைத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வேற லெவல் வாக்குறுதி.!

இளைஞர்களை குறிவைத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வேற லெவல் வாக்குறுதி.!


vijayabaskar election canvas

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் வாக்குசேகரித்தார். 

Vijayabaskar

அப்போது மக்கள் முன்பு பேசிய அமைச்சர், விராலிமலை தொகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் எனது சொந்த செலவில் தமிழகத்திலேயே முதன்முறையாக ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் தொடங்குவேன். தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் தொகுதிக்கு உட்பட்ட 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன். 

அதுமட்டுமின்றி 15 ஆயிரம் பெண்களுக்கு மலம்பட்டி, குளத்தூர், அன்னவாசல் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுப்பேன். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி செலவை நான் ஏற்பேன். வீடுதோறும் மரங்களை வளர்ப்பவர்களுக்கு பரிசுகளையும் வழங்குவேன். எனவே இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என பேசினார்.