தமிழகம்

கொரோனாவுடன் போராடும் மருத்துவர்களுக்கு நன்றி கூறிய அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள்கள்! வைரலாகும் வீடியோ!

Summary:

Vijaya baskar daughter thanking video

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் பரவிய இந்த கொடிய கொரோனா வைரஸால் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. ரயில்கள் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடே முடங்கியுள்ளது.  இந்நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். 

 மேலும் நாட்டின் நலனுக்காக தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள் என பலரும் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் அவர்களுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடியின் அறிவுரையின்படி நேற்று மாலை 5 மணியளவில் நாட்டுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு வெளியே நின்று கைகளை தட்டி அவர்களை கௌரவித்தனர். 

இந்நிலையில் தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் அவரது குடும்பத்துடன் மருத்துவத்துறையினருக்கு கைதட்டி நன்றி கூறினார். மேலும் அவரது மகள்கள் ரிதன்யா மற்றும் அனன்யா இருவரும் மருத்துவர்களுக்கு நன்றி கூறி பேசியுள்ளனர். அந்த வீடியோவை விஜயபாஸ்கர் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


Advertisement