தமிழகம் சினிமா

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க நடத்தும் போராட்டத்தில் விஜய் கலந்துகொள்கிறாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்!

Summary:

vijay will join with DMK Protest


குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க 23ஆம் தேதி எதிர்ப்பு பேரணியை சென்னையில் நடத்த உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ளுமாறு மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில் சென்று அழைப்பு விடுத்தது. அதேபோல நடிகர் சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நாளை சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் நடிகர் விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகரிடம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியார்கள் கேட்டபோது அவர், நடிகர் விஜய் கர்நாடகாவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தார். 


Advertisement