தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
ஆரம்பமே அடி தூள்... உள்ளாட்சி தேர்தலில் கெத்து காட்டிய விஜய் மக்கள் இயக்கம்.! எத்தனை பேர் வெற்றி தெரியுமா.?

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என இன்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளால் கூட பெற முடியாத வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் சாத்தியமாக்கியுள்ளனர் என விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் பெரும்பாலானோர் வார்டு உறுப்பினர்கள்தான் என்றாலும் அரசியல் தளத்தில் இந்த வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது.