நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னம்.! தேர்தல் ஆணையம் மறுப்பு.! என்ன சின்னம் தெரியுமா.?

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னம்.! தேர்தல் ஆணையம் மறுப்பு.! என்ன சின்னம் தெரியுமா.?



vijay makkal iyakkam request symbol

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை நடத்தியது.  சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தநிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளது.