தமிழகம் சினிமா

நடிகர் விஜயை கலாய்த்த அஜித் ரசிகர்! விஜய் ரசிகரின் கோபத்தால் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அஜித் ரசிகர்!

Summary:

vijay fan attacked ajith fan


அஜித்-விஜய் இருவரில் யார் கெத்து என்பதை நிரூபிக்க சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மோதல் நடைபெற்று வந்தநிலையில் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் அஜித் ரசிகரான உமாசங்கர் என்பவரும், விஜய் ரசிகரான ரோஷன் என்பவரும் வீட்டின் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது விஜய்யை பற்றி உமாசங்கர் தரைக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்துக் கொண்டுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த ரோஷன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து உமாசங்கரின் தலை, மார்பு பகுதியில் சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்த உமாசங்கரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
 


Advertisement