திமுக, அதிமுக திட்டங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு! CM விஜய்யின் புது ரூட்...!!!
தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டு 'வெற்றி தமிழகம்' என்ற புதிய கொள்கையை முன்னெடுக்க தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. துறைவாரியான நீண்டகால வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்குமாறு மாநிலத் தலைமைச் செயலாளர் சாய் குமார் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெற்றி தமிழகம் என்ற புதிய நிர்வாக அணுகுமுறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துறைவாரியாக தொலைநோக்குத் திட்டங்கள்
தகவலின்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் ஒவ்வொரு துறையும் தனித்தனி தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில், உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்திட்டங்கள் தயாரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: யாருகிட்ட உங்க ஆட்டம்லா.... டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!
முந்தைய திட்டங்கள் ஆய்வுக்கு
இதையடுத்து, கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றின் பலன்கள், குறைபாடுகள் மற்றும் தற்போதைய சூழலுக்கு பொருந்தும் அம்சங்களை மதிப்பீடு செய்து, தேவையான மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட திட்டங்களாக வடிவமைக்க வேண்டும் என்று அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றம்
மக்களின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பழைய திட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து புதுப்பிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்க அரசு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பரிந்துரைகளை விரைவாகச் சமர்ப்பிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி சொன்ன CM விஜய்! இனி சாப்பாடு வேற லெவல்ல இருக்கும்... விரைவில் வெளியாகப்போகும் புதிய லிஸ்ட்..!!!