குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.. நடந்த பகீர் சம்பவம்..!

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.. நடந்த பகீர் சம்பவம்..!


vessel-stucking-in-baby-head-chennai

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சில்வர் பாத்திரம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகாமையில் பாடி பகுதியில் வசித்து வருபவர் வினோத்ராஜ். இவருக்கு ஒன்றரை வயதில் யஷ்விதா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த யஷ்விதாவின் தலையில் எதிர்பாராதவிதமாக சில்வர் பாத்திரம் ஒன்று மாட்டிக்கொண்டது.

இதனால் குழந்தை மிகவும் அழத் தொடங்கிய நிலையில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர் அங்கு ஓடிவந்த பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டியிருந்ததை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் போராடியும் சில்வர் பாத்திரத்தை எடுக்க முடியாததால், அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

chennai

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், குழந்தையின் தலையில் சிக்கியிருந்த சில்வர் பாத்திரத்தை அகற்ற முயற்சித்த நிலையில், அகற்ற முடியாததால் பாத்திரத்தை எந்திரம் மூலமாக அறுத்து எடுக்க திட்டமிட்டனர். 

இருப்பினும் சிக்கியிருந்தது குழந்தை என்பதால் எடுக்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடும் என நினைத்து சோப்பு நுரை மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி சுமார் 15 நிமிடம் போராடியுள்ளனர்.

பதினைந்து நிமிடப் போராட்டத்திற்குப் பின், குழந்தையின் தலையில் சிக்கியிருந்த சில்வர் பாத்திரத்தை தீயணைப்புத்துறையினர் லாவகமாக அகற்றியுள்ளனர். அத்துடன் குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.