ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரத்தமிழச்சியின் நினைவு தினம் இன்று! வீரத்தமிழச்சியின் வீர வரலாறு!
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரத்தமிழச்சியின் நினைவு தினம் இன்று! வீரத்தமிழச்சியின் வீர வரலாறு!

இராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி மற்றும் தாய் முத்தாத்தாள் நாச்சியார் அவர்களுக்கு 3 ஜனவரி, 1730 ஆண்டு ஒரே மகளாய் பிறந்தவர் தான் வேலு நாச்சியார்.
வேலு நாச்சியாருக்கும் சிவகங்கை இளய மன்னர்,முத்துவடுகநாதர் தேவருக்கும் திருமணம் நடைபெற்றது. முத்துவடுகநாத தேவர் களரியில் சிறந்து விழங்கினாலும், சிவபக்தனான அவர் கோவிலுக்கு செல்லும்பொழுது தனது ஆயுதத்தை எடுத்து செல்வதில்லை. இதனை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்து சிவகங்கையை கைபற்றினர்.
வேலுநாச்சியார் தனது கணவரை கொன்ற ஆங்கிலேயர்களை பழிவாங்க, நாச்சியார் சபதம் ஏற்றார். இதனையடுத்து மருது சகோதரர்களின் அறிவுரை ஏற்று எட்டு வருடம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் வேலுநாச்சியார்.
இதனையடுத்து 1780-ல் போர் அறிவித்து வியூகம் அமைத்தார் இராணி வேலு நாச்சியார். அந்த போரில் இராணி வேலு நாச்சியார் வெற்றி பெற அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகம், தான் காரணம். அதிலும், தற்கொலை படை, கொரில்லா படை இதையெல்லாம் வைத்து தான் இவர் இத்தனை சுலபமாக இந்த வெற்றியை பெற முடிந்தது என்று கூறுகிறது வரலாறு.
வேலுநாச்சியாருக்கு முற்றிலும் உறுதுணையாக இருந்தவர்கள் மருது சகோதரர்கள் ஆவர். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.