பெண் மருத்துவர் 2 சிறார்கள் உட்பட 5 பேர் கும்பலால் பலாத்காரம்.. வேலூரில் பதறவைக்கும் சம்பவம்..! திட்டமிட்டு நடந்த பயங்கரம்.! 

பெண் மருத்துவர் 2 சிறார்கள் உட்பட 5 பேர் கும்பலால் பலாத்காரம்.. வேலூரில் பதறவைக்கும் சம்பவம்..! திட்டமிட்டு நடந்த பயங்கரம்.! 


Vellore Woman Doctor Sexual Abused 5 Man Gang Police Arrested

நள்ளிரவில் சினிமா பார்த்துவிட்டு வந்த பெண் மருத்துவரை 5 பேர் கும்பல் பலாத்காரம் செய்து, அவரிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த பயங்கரம் நடந்துள்ளது. 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில், கடந்த 20 ஆம் தேதி இரவில் 2 வாலிபர்கள் போதையில் சண்டையிட்டுள்ளனர். அப்போது, அவ்வழியே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், வழிப்பறி செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு சண்டையிட்டது அம்பலமானது. 

இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடத்த 4 நாட்களுக்கு முன்னதாக காட்பாடியில் இருந்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு செல்லவிருந்த மருத்துவரை பலாத்காரம் செய்த பகீர் தகவலும் தெரியவந்துள்ளது. 

அதாவது, பெண் மருத்துவர் தனது ஆண் நண்பருடன் இரவு 10 மணி காட்சிக்கு காட்பாடி சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவில் வேலூர் நோக்கி வந்துகொண்டு இருந்த நிலையில், பாலாற்றங்கரையோரம் ஆட்டோ ஓட்டுநர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மருத்துவரின் ஆண் நண்பரை தாக்கி இருக்கின்றனர். பின்னர், இளம்பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

vellore

மேலும், பெண்ணிடம் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், 2 சவரன் நகைகளை பறித்து தப்பி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி இணையவழியில் புகார் அளித்த நிலையில், சவாரிக்கு வருவதாக நடித்து பெண்ணுக்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த புகாரில் பேரில் விசாரணை நடக்கும் போது தான், மேற்கூறிய 2 பேர் வழிய வந்து சிக்கி இருக்கின்றனர்.

இந்த வழக்கு விவகாரத்தில் மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வேலூர் சுற்றுவட்டாரத்தில் வழிப்பறி நடப்பதாகவும், அதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.