நைட் டியூட்டி தகுசினு., தகுஜும்.... வேலூர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்... காண்டிராக்டர் பரிதாபங்கள்.!vellore-road-construction-making-issue

இரவோடு இரவாக அமைக்கப்பட்ட சாலையின் புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியதால், ஒரே நாளில் வேகமாக சாலை அகற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் மெயின் பஜார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக சாலை அமைக்கப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கூட அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்தது.

vellore

இந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இரவோடு இரவாக அமைக்கப்பட்ட அந்த சாலை நேற்று மீண்டும் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரே நாளில் சாலை அமைத்து மறுநாளே அதை அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.