அரசியல் தமிழகம்

எனது அப்பா கொரோனாவால் இறக்கவில்லை! கண்ணீருடன் பேசிய வசந்தகுமாரின் மகன்.!

Summary:

vasanthakumar son talk about his father death

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி. ராகுல் காந்தி, நிர்மலா சீத்தாராமன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். சுயநினைவு இழந்த நிலையில், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை.

அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. எனவே அப்பா கொரோனாவால் இறக்கவில்லை எனக் கூறினார். இவரின் உயிரிழப்பிற்கு பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து வசந்த் குமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement