கல்லில் நார் உரிப்பது போல.. ராயல்டி நிகழ்ச்சியில் உருகி வேதனையுடன் பேசிய வைரமுத்து!!

கல்லில் நார் உரிப்பது போல.. ராயல்டி நிகழ்ச்சியில் உருகி வேதனையுடன் பேசிய வைரமுத்து!!


vairamuthu-talk-in-royalty-show

தமிழ் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டு முன்னணி பிரபலமாக வருபவர் கவிஞர் வைரமுத்து. இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி  
என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் திரைப்பட இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்களுக்கு ராயல்டியை பெற்றுத்தரும் IPRS எனும் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதவர்கள். உரிமை தெரியாதவர்கள். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும், நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது.

வெளிநாடுகளில் 100 பாட்டு எழுதினால் போதும். அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை. அவரால் தீவு வாங்க முடியும். பணம் முடிந்த பின்பு தீவிலிருந்து வெளியேறி மீண்டும் சில பாடல்களை எழுதி அல்லது பாடிவிட்டு பணம் சம்பாதித்து மறுபடியும் தீவை நோக்கி செல்லமுடியும்.

ஆனால் நான் இதுவரை 7,500 பாடல் எழுதியுள்ளேன். இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். கல்லில் நார் உரிப்பது போல போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகிறார்கள். இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும்தான் உருவாக்குபவர்கள். எனவேதான் அவர்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்கிறோம் என கூறியுள்ளார்.