தமிழகம் இந்தியா

உள்ளாடைக்குள் இதையெல்லாமா மறச்சு வைப்பீங்க... இரண்டு பெண்களை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Summary:

சானிட்டரி நாப்கினில் வைத்து தங்கத்தை கடத்திவந்த இரண்டு பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சானிட்டரி நாப்கினில் வைத்து தங்கத்தை கடத்திவந்த இரண்டு பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது இரண்டு பெண் பயணிகள் மீது சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்ததில் 1.2 கிலோ தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி சானிட்டரி நாப்கினில் வைத்து உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிகப்பட்டது.

இரண்டு பெண்களும் சுமார் 1.2 கிலோ அளவிலான தங்கத்தை பேஸ்ட் போன்று மாற்றி அதனை தங்களின் உள்ளாடைக்குள் சானிட்டரி நாப்கினில் வைத்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார்  62 லட்சத்து 66 ஆயிரம் ஆகும்.

இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பெண்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த தெய்வானை என்பதும், புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement