ஓடும் பேருந்தில் இரண்டு பெண்கள் பார்த்த வேலை.! பதறிப்போன சக பயணிகள்.! அதிர்ச்சி சம்பவம்.!

தற்போதைய சூழ்நிலையில் பேருந்தில் பயணிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். பேருந்தில் தான் சமீபகாலமாக அதிகப்படியான திருட்டு நடக்கிறது. செல்போன், பர்ஸ், நகை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது அவசியம். கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச்சென்றுவிடுகிறார்கள் கயவர்கள்.
இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஜூவா என்ற பெண் அப்பகுதியில் பெண்கள் அழகு நிலைய கடையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று ஜீவா பியூட்டி பார்லருக்கு செல்வதற்காக மல்லுப்பட்டியில் இருந்து பாலக்கோடுக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கத்திரியால் கட் செய்து பேக்கில் இருந்த பணத்தை எடுத்துள்ளனர்.
இதனை பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் பார்த்து அந்த இரு பெண்களையும் பிடித்து பாலக்கோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தை சேர்ந்த சிவகாமி (35), சாந்தி (60) என்பதும், இவர்கள் பேருந்தில் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.