நகை கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகை கொள்ளை.! கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள்.!

நகை கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகை கொள்ளை.! கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள்.!


two-police-arrested-for-theft-case

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 11-ம் தேதி மகேந்திரின் மகன் ஆசிஷ் ஸ்ரீபெரும்புதூரில் நகைகளை விற்பனை செய்ய ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தி முனையில் மிரட்டி ஆசிஷ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து ஆசிஷ் மற்றும் மகேந்திர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

arrest

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் நகை கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன்,அவரது நண்பர் தமிழரசன், மகேந்திர் நகை கடையில் வேலை செய்யும் சந்தோஷ், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் மாரி, வண்டலூரை சேர்ந்த ராகுல் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் கதிரவன் உத்திரமேரூர் அடுத்த மானாமதி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.தமிழரசன், திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளருக்கு டிரைவராக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.