இருசக்கர வாகனம் மீது கார் மோதி பயங்கர விபத்து... இருவர் துடிதுடித்து மரணம்.. ஒருவர் படுகாயம்..!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி பயங்கர விபத்து... இருவர் துடிதுடித்து மரணம்.. ஒருவர் படுகாயம்..!


two-persons-dead-by-bike-accident-in-karur

இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட ஜங்கால்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த பயங்கர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.இதனை தொடர்ந்து அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த கார் ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். 

Karur

பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்நிலைய காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.