சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவர் மற்றும் தாய்மாமன்.! சிறுமி எடுத்த அதிரடி முடிவு.!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவர் மற்றும் தாய்மாமன்.! சிறுமி எடுத்த அதிரடி முடிவு.!


Two man sexual torture to young girl

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்த14 வயது சிறுமி 10 ஆம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் சுந்தரராசு என்பவரை கடந்த 2016ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சுந்தரராசு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதேபோல் சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறையான முருகானந்தம் என்பவரும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் இவர்களது கொடுமை தாங்க முடியாமல் சிறுமி இதுகுறித்து சைல்ட் லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் உடனடியாக விரைந்து சென்று சுந்தரராசு மற்றும் முருகானந்தத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.