சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
விஜய் கட்சி மாநாட்டிற்கு சென்றதால் கடன்... மூதாட்டியிடம் தங்க செயின் பறித்த த.வெ.க நிர்வாகி.!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றதால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கவுதம் என்ற இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையிலடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகேயுள்ள தென்னிந்தியாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம். 30 வயதான இவர் ஸ்டீல் கடையில் வேலை செய்து வருகிறார். மேலும் ஆற்காடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு ஒன்றிய நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரணியருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மலர்(60). இவர் சென்னையிலுள்ள தனது மகனைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார். இதன்பிறகு பேருந்திலிருந்து இறங்கிய அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்ற கவுதம் மூதாட்டியை வீட்டில் இறக்கி விடுகிறேன் எனக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். இதன் பிறகு ஆள் நடமாட்டமில்லாத பகுதியை அடைந்ததும் மூதாட்டியை இறக்கி விட்ட கவுதம் பெட்ரோல் போட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை பின் தொடர்ந்த கவுதம் மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துச் சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!
இது தொடர்பாக காவல்துறையிடம் மூதாட்டி மலர் புகாரளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அதனடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறை வாகன சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த கவுதமை கைது செய்து விசாரித்தனர். அப்போது மூதாட்டியிடமிருந்து செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார். கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற விஜய் கட்சி மாநாட்டிற்கு நிர்வாகிகளை காரில் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட கடன் சுமையை தீர்ப்பதற்காக மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக வாக்குமூலமளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: விடுமுறையில் வழிபறி... "பாட்டியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர்..." மடக்கி பிடித்த மக்கள்.!!