"கலவி பாடம்"., ஆசையாக பேசி மாணவியை நாசம் செய்த டியூசன் மாஸ்டர்..!!
வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில்நாதன் இவருக்கு வயது 40 . இவர் தோல் தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர், மாலை நேரங்களில் தனியார் டியூசன் சென்டர் ஒன்றில் வேதியியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரிடம் டியூசன் படிக்க 17 வயது மாணவி ஒருவர் வருவது வழக்கம். இந்த மாணவியுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட செந்தில்நாதன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு பிறந்த நாள் என்று கூறி அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், மாணவியிடம் ஆசையாக பேசி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து, வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே, மாணவியின் செய்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டியூசன் ஆசிரியர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.