தமிழகம்

தாலி கட்டி, சாந்தி முகூர்த்தம் முடிந்த கையோடு இளைஞர் செய்த காரியம்! கதறிய இளம் பெண்!

Summary:

Trichy men escaped after finishing marriage and first night

திருச்சி மாவட்டம் அருகே உள்ள குப்பங்கங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம் பெண் அனுயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் கூறி அனுயாவின் வீட்டில் சம்மந்தம் பேச கூறியுள்ளார்.

இளைஞரின் பேச்சை கேட்டு அவரது பெற்றோர் அனுயாவின் வீட்டில் சம்மந்தம் பேசியுள்ளனர். ஆனால், அனுயாவின் பெற்றோர் அந்த சமந்தத்திற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அனுயாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி சயமபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

அதன்பின்னர் அந்த பெண்ணுடன் சாந்தி முகூர்த்ததையும் முடித்துள்ளார் அந்த இளைஞர். ஒரே நாளில் திருமணம், சாந்தி முகூர்த்தம் இரண்டையும் முடித்துவிட்டு எதுவம் தெரியாததுபோல் அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார் அந்த இளைஞர்.

நடந்த சமப்வத்தை தனது பெற்றோரிடம் அனுயா கூற, அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் மீது புகார் வழங்கப்பட்டு அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement