தமிழகம்

காதலன், 2 நண்பர்கள்! புதருக்குள் இருந்து கதறிய +2 மாணவி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Trichy girl abused by lover and friends

காதலித்த பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் +2 படித்துவந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரதீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் மாணவியின் தாய் உடல் நிலை சரியில்லாமல் அவரது தங்கை வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இதனால், கடந்த ஞாயிற்று கிழமை தனது அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மாணவி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட பிரதீப், இருசக்கர வாகனத்தில் வந்து தான் கொண்டுசென்று விடுவதாக கூறி மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத காலிமனை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பிரதீப்பின் நண்பர்கள் இருவர் இருந்துள்ளனர். இதனை அடுத்து மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளன்னர்.

இந்த சம்பவத்தை எதேச்சையாக பார்த்த அந்த பகுதி மக்கள் சத்தம் போட்டதை அடுத்து மாணவியை விட்டுவிட்டு மூவரும் தப்பித்து சென்றுள்ளனர். பின்னர் அந்த பகுதி மக்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், கோட்டை மகளிர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், ஏற்கெனவே 4 முறை தன்னை பிரதீப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை தன்னை மிரட்டி அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ அல்லது இதை வெளியே சொன்னாலோ உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என பிரதீப் கூறியதாகவும் மாணவி கூறியுள்ளார்.

இதனை அடுத்து பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த கோட்டை போலீசார் தலைமறைவாக இருக்கும் மூவரையும் தேடிவருகின்றனர்.


Advertisement