திருச்சி: லாரி - கார் மோதி கோர விபத்து; சிறுமி உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு.!Trichy car lorry accident 6 died

அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவாசி, திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதே சாலையில் லாரி ஒன்று வந்த நிலையில், இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிறுமி உட்பட ஆறு பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

tamilnadu news

அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆறு பேர் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.