சோகம்.. நண்பருடன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நீதிபதியின் மகள்.!
வேலூர் மாவட்டம் சத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் நீதிபதியாக வேலூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அறிவரசி என்ற ஒரு மகள் ஒருவர் உள்ளார். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சட்டக் கல்லூரி 4ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே கல்லூரியில் படிக்கும் இவரது நண்பரான முகமது பஷீர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோவளத்திலிருந்து திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக சென்ற முகமது பஷீரின் இருசக்கர வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அறிவரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் படுகாயம் அடைந்த முகமது பஷீரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.