பெட்ரோல் டீசல் விலையை ஓரங்கட்டிய தக்காளி விலை.! கடும் சோகத்தில் இல்லத்தரசிகள்.!

பெட்ரோல் டீசல் விலையை ஓரங்கட்டிய தக்காளி விலை.! கடும் சோகத்தில் இல்லத்தரசிகள்.!


tomato rate increased

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதனால் வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது. பல பகுதிகளில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் தக்காளி மொத்த விலை கடைகளிலேயே கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் சில்லறை கடைகளில் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, தக்காளி சில்லரை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தநிலையில், ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில்  தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தாறுமாறாக ஏறி இருக்கும் தக்காளி,வெங்காயம் விலை உயர்வால் தினந்தோறும் சட்னிக்கு தக்காளி சேர்ப்பது என்பது முடியாத காரியமாகயுள்ளது. எனவே தக்காளி இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி என்பது குறித்த தேடல்களும் அதிகரித்துள்ளது.